எங்களை பற்றி
தமிழகத்தில், சத்திரிய குலத்தவரான சேர, சோழ, பாண்டிய வம்சத்தினர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற, நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட நாடார் பெருங்குடி மக்களுக்கு தலைநகர் சென்னையில், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் என்ற பெயருடன் 100-ஆண்டுகளுக்கு முன்னதாக, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவை பூர்வீகமாகக் கொண்ட வர்த்தகம் செய்யும் நாடார்களால் சென்னை. மயிலாப்பூர், ஆமில்டன் வாராவதியில் 1954-ல் துவங்கப்பட்டு. திரு.கல்கண்டு நாடார் என்று அழைக்கப்பட்ட திரு. D.லட்சுமண நாடார் இல்லத்தில் சங்கம் நடத்தப்பட்டு வந்தது.
நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்திற்கு அலுவலகம் அமைக்க, சென்னையின் முக்கிய பகுதியான எழும்பூரில் திரு. K.T ஜானகிராம் நாடார் அவர்கள் நிர்வாகத்தின் போது நிலம்
வாங்கப்பட்டது.
மேற்கொண்டு திரு.K.பரமசிவ நாடார் அவர்கள் தலைமையில், திரு K.T.கோசல்ராம் நாடார் அவர்களது முன்னிலையில் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு
திரு. S இராமச்சந்திர நாடார் அவர்களது தலைமையில் கட்டிடம் கட்டப்பட்டு, மாவட்ட நீதிபதி திரு. S.கணேசன் M.A. B.L. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
தற்போது புதிதாக 5 அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டு 16.9.2024 அன்று திறப்பு விழா காண்கிறது
நமது சங்கம் நாடார் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக நாடார் இனத்தை குறைத்து மதிப்பிட்டு பேசினாலோ, சரியான எதிர்ப்பு கொடுத்து அத்தகைய நிகழ்ச்சிகள் நடக்காதவாறு காத்து வருகிறது.
தமிழகம் முழுவதும் தெரிந்த ஒரு சமுதாய அமைப்பாக நெல்லை நாடார் சங்கம் தலைநிமிர்ந்து செயலாற்றி கொன்னுயிருக்கிறது .